புளிப்பான மாங்காய் துவையல் ரெசிபி.. இப்படி செய்து பாருங்கள் சுவை அள்ளும்..!

Advertisement

மாங்காயில் பல உணவுகளைச் செய்யலாம். மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி எனச் சொல்லி கொண்டே போகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாங்காயை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட மாங்காயில் துவையல் எப்படிச் செய்வது குறித்துப் பார்க்கலாம்.. இந்த துவையலுக்கு வெறும் ரசம் சாதம் சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அள்ளும் .. இல்லையென்றால் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் மற்றும் டிபன் போன்ற உணவுக்குச் சேர்த்துச் சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:-

மாங்காய் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 8
பச்சை மிளகாய் - 2
கொள்ளு -2 ஸ்பூன்
உ.பருப்பு - அரை கப்
க.பருப்பு - 2 ஸ்பூன்
பெருங்காயம் -தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
கடுகு-2 ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:-

முதலில் மாங்காயைத் துருவிக் கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு கொள்ளு, உ.பருப்பு மற்றும் க.பருப்பு போன்றவற்றைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

நன்கு வதக்கிய பிறகு காற்றில் ஆற விட வேண்டும். மிக்சியில் வறுத்த கலவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றித் துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொண்டு அரைத்த மாங்காய் துவையலில் சேர்க்கவும். சுவையான.. புளிப்பான மாங்காய் துவையல் தயார்..

Advertisement
மேலும் செய்திகள்
how-to-cook-andra-pepper-chicken
காரசாரமான சுவையான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் ரெசிபி..! சூப்பர் டேஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க
how-to-make-kovaikkai-masalapath-recipe
சுவையான கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி?? வாங்க பார்க்கலாம்..
how-to-cook-cauliflower-soup
அருமையான வெயிட் லாஸ் ட்ரிங்க்! காலிஃபிளவர் சூப் செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்..
how-to-make-saththu-mavu
இனி வீட்டிலே சத்துமாவு தயாரிக்கலாம்! கெமிக்கல் கலந்த மாவுக்கு குட்பை சொல்லுங்கள்..
how-to-make-pepper-chicken
காரசாரமான ஆந்திரா நாடு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி??
how-to-make-ragi-samiya-cutlet
சுவையான ராகி சேமியா கட்லெட் செய்வது எப்படி??
how-to-make-rava-potato-finger-fry
சுவையான.. கிரிஸ்பியான.. ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை செய்வது எப்படி?
how-to-make-cucumber-pachadi
உடல் எப்பொழுதும் குளு குளுன்னு இருக்க இதை சாப்பிடுங்க..!
how-to-make-neem-tea
சர்க்கரை நோய் முழுவதும் குணமாக வேப்பம் டீ குடியுங்க..
how-to-make-capsicum
சப்பாத்திக்கு ஏற்ற குடைமிளகாய் தொக்கு செய்வது எப்படி??
/body>