நுரையீரலை சளியில் இருந்து பாதுக்காக்க பூண்டு பால் குடியுங்கள்.. உடனடி தீர்வு காணலாம்..

by Logeswari, Dec 28, 2020, 18:24 PM IST

நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. பருவ காலம் மாறும் பொழுது சளி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனை குணப்படுத்த பாட்டி வைத்தியமான பூண்டு பால் உதவுகின்றது. இது நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணியாக செயல்படும். திடீரென்று சளி மற்றும் காய்ச்சல் வந்தால் பூண்டு சேர்த்தப் பாலைக் குடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும். சரி வாங்க பூண்டு பால் தயாரிக்கும் முறை குறித்து பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருள்கள்:-
பால்- 1 லிட்டர்
பூண்டு -தேவையான அளவு
பனங்கற்கண்டு -தேவையான அளவு
மிளகுத் தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
தேன் - 1 ஸ்பூன்
இஞ்சி - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பால் ஊற்றி அதில் தோல் உரித்த பூண்டு, பனங்கற்கண்டு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து பாலை ஒரு 20 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்கு சுண்டிய பதத்தில் வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பிறகு கொதிக்க வைத்த பாலை வடிகட்டி அதில் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு தேன் ஆகியவை சேர்த்து பருக வேண்டும். திப்பியில் சேர்ந்த பூண்டை அப்படியே சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பெருங்காயம் சேர்ப்பதால் செரிமானம், வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்பு சளி, சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும் அற்புதமான மருந்து பொருளாகும்..

You'r reading நுரையீரலை சளியில் இருந்து பாதுக்காக்க பூண்டு பால் குடியுங்கள்.. உடனடி தீர்வு காணலாம்.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை