புதினா டீ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த டீயை தினமும் குடிப்பதால் உடலில் கலந்து இருக்கும் தேவையான கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதய நோய், சீரழிவு நோய், நரம்பு மண்டல நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயிற்றுவலி போன்றவற்றை தடுக்க புதினா உதவுகிறது. புதினாவை தினமும் சாப்பிடுவதால் நமது வாழ் நாளை அதிகமாக்குகிறது. புதினா டீயாகவும் குடிக்கலாம் அல்லது தினமும் சமைக்கிற சமையலிலும் சேர்த்து கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது.
தேவையான பொருள்கள்:-
ஆரஞ்சு பழத்தோல் - தேவையான அளவு
புதினா இலைகள் -தேவையான அளவு
வெந்நீர் - 2 கப் சர்க்கரை- தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஆரஞ்சு பழத்தில் இருந்து தோலை மட்டும் பிரித்து கொள்ளவும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் ஆரஞ்சு தோல் மற்றும் தேவையான இலையை சேர்த்து மீண்டும் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து டீயை வடிகட்டி கொள்ள வேண்டும். கடைசியில் ஐஸ் கட்டி மற்றும் சர்க்கரை சேர்த்து பருக வேண்டும். இதனை தினமும் தவறாமல் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும் மற்றும் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.