வாட்ஸ்அப்புக்கு பை சொல்லி, சிக்னல்க்கு மாறுகிறீர்களா? இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்!

வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள். எலோன் மஸ்க், 'சிக்னலை பயன்படுத்துங்கள்' என்று ட்விட்டரின் பதிவு செய்துள்ளதை தொடர்ந்து அநேகர் சிக்னல் (signal) செயலிக்கு மாறி வருகின்றனர். சிக்னல் செயலியின் சில சிறப்பம்சங்கள் இதோ...

ஸ்கிரீன் லாக்
சிக்னல் செயலியில் ஸ்கிரீன் லாக் வசதி உள்ளது. ஆகவே, உங்கள் ஸ்மார்ட்போன் அன்லாக்காக இருந்தாலும் சிக்னல் செயலியை பயன்படுத்த 'பின்' (PIN) அல்லது பயோமெட்ரிக் கடவுச்சொல் ஒன்றை உபயோகப்படுத்தவேண்டும். ஆகவே, ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்கள் போனை வேறொருவரிடம் கொடுத்திருந்தாலும் அவர்கள் சிக்னல் செய்திகளை வாசிக்க இயலாது. சிக்னல் செயலியில் ஸ்கிரீன் லாக் வசதியினை செட்டிங்ஸ்>பிரைவசி>டாக்கிள் ஸ்கிரீன் லாக் ஆன் என்ற வழியில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.

சிக்னல் நோட்டிஃபிகேஷன் ஆஃப்
இப்போது அநேகர் சிக்னல் செயலியில் இணைய ஆரம்பித்துள்ளனர். ஆகவே, உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் சிக்னல் செயலியில் இணைந்ததும் உங்களுக்கு ஓர் அறிவிக்கை வரும். அநேகர் சேரும்போது அறிவிக்கை வந்துகொண்டே இருந்தால் அது தொந்தரவாக இருக்கும். ஆகவே, தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் சிக்னலில் இணைவது குறித்த நோட்டிஃபிகேஷன் வராமல் தவிர்க்க பின்வரும் வழியை பயன்படுத்தலாம். செட்டிங்ஸ்>நோட்டிஃபிகேஷன்ஸ்>டாக்கிள் காண்டாக்ட் ஜாயிண்ட் சிக்னல் ஆஃப்

போட்டோக்களில் முகங்களை மறைத்தல்
தனியுரிமை குறித்து அதிக அக்கறையுள்ளவர்களாக இருந்தால் மற்றவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் புகைப்படங்களை செயலியில் பகிர விரும்பமாட்டீர்கள். யாராவது இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலையில் அவர்கள் முகத்தை மறைக்க வேண்டுமானால் அது நேரம் எடுக்கும் வேலையாகிவிடும். சிக்னல் செயலியில் போட்டோக்களிலுள்ள முகங்களை மறைக்கும் (blurring) வசதி உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் பகுதிகளையும் மறைக்க இயலும். + குறியை அழுத்தவும்>அனுப்ப வேண்டிய படத்தை அழுத்தவும்>ப்ளர் பொத்தானை அழுத்தவும் (கறுப்பு மற்றும் வெள்ளை டைல்ஸ் இருப்பதுபோன்ற வட்டவடிவமாக காட்சியளிக்கும்)>டாக்கிள் ப்ளர் ஃபேசஸ் கூடுதல் விவரங்களை மறைப்பதற்கு திரையில் எந்த இடத்திலும் உங்கள் விரலை பயன்படுத்தலாம்.

மறைந்து போகுமாறு செய்தி அனுப்புதல்
டிஸ்ஸப்பியரிங் மெசேஜ் என்ற வசதியை வாட்ஸ்அப் இப்போதுதான் அறிமுகம் செய்தது. ஆனால், சிக்னல் செயலியில் இது நெடுங்காலமாகவே உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செய்திகள் அழிந்துவிடும். ஆகவே, உங்கள் உரையாடல் தனிப்பட்டதாக (private) இருக்கும். குறிப்பிட்ட நபரின் பெயரை அழுத்தவும்>டாக்கிள் டிஸ்ஸப்பியரிங் மெசேஜ்ஜஸ்>டைமரை தள்ளி செய்தி அழிய வேண்டிய காலத்தை குறிப்பிடவும்.

எத்தனை முறை இணைப்பை பார்க்கலாம்?
டிஸ்ஸப்பியரிங் என்னும் மறையக்கூடிய செய்திக்கு கால அளவை நிர்ணயித்தாலும் மற்ற நபர் அக்கால அளவு வரைக்கும் அதை வாசிக்க முடியும். குறைந்த கால அளவை நிர்ணயித்திருந்தால் அந்த நபர் சிக்னல் செயலியை பார்த்தால் மட்டுமே செய்தி அவருக்குப்போய் சேரும். இணைப்பு நேரம் (attachment limit) என்பது சற்று வேறுபட்டது. இந்த அமைப்பில் ஒரே ஒருமுறை பார்க்கும்படி படத்தையோ, வீடியோவையோ அனுப்பலாம். ஒருமுறை பார்த்து மூடியதும் அந்த இணைப்பு (attachment) அழிந்துவிடும். நீங்கள் அதை அனுப்பி பல நாள்கள் அல்லது வாரங்கள் கழிந்தாலும் ஒருமுறை மட்டுமே அதை பார்க்க இயலும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds

READ MORE ABOUT :