கிராமத்து பாணியில் சுவையான கறி குழம்பு செய்வது எப்படி??

by Logeswari, Jan 12, 2021, 19:58 PM IST

சிக்கன் கறி ஒரு செளத் இந்தியன் ஸ்டைல் ரெசிபி ஆகும். இதனை கிராமத்தில் மிக சுவையாக சமைப்பார்கள். கறி குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும். சரி வாங்க இதை எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
சிக்கன்-1 கிலோ
தேங்காய் பால்-2 கப்
வெங்காயம்-2
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
கரம் மசாலா-1 ஸ்பூன்
வெண்ணெய்-100 கிராம்
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
சர்க்கரை-சிறிதளவு

செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா, மஞ்ச தூள், மிளகாய் தூள் ஆகியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

இதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்று கிளறி விட வேண்டும். பின்னர் தேங்காய் பால் ஊற்றி ஒரு 10 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். சூடான, காரசாரமான சிக்கன் கறி குழம்பு தயார்..

You'r reading கிராமத்து பாணியில் சுவையான கறி குழம்பு செய்வது எப்படி?? Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை