வட நாட்டின் ஸ்பெஷலான தால் மக்கானியை சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். வாங்க தால் மக்கானியை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காராமணி - 1/4 கப்
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 6-7
பச்சை மிளகாய் - 2-3
தக்காளி - 4
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 ஸ்பூன்
க்ரீம் - 2 ஸ்பூன்
செய்முறை:-
முதலில் தேவையான காராமணி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஊறவைத்ததை குக்கரில் போட்டு உப்பு, இஞ்சி மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
மிக்சியில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் இட்டு உருகியதும் சீரகம், வெந்தயம் கொண்டு தாளிக்க வேண்டும். அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். குக்கரில் வேக வைத்த காராமணி, உளுத்தம் பருப்பு ஆகியவை சேர்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டு 4 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியில் க்ரீம் சேர்த்து இறக்கினால் சுவையான தால் மக்கானி தயார்.