கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டு என்பது பழைமையான ஒரு ரெசிபி. இதை உண்பதால் உடல் வலிமை பெரும். மூலை சுறுசுறுப்பு அடையும். சரி வாங்க இந்த கூட்டை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
முருங்கைக்காய் -4
கத்திரிக்காய் - 150 கிராம்
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:-
முதலில் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காயை சிறிது சிறிது துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் லேசான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி காய்கறிகளை தனியாக பிரித்து வேற பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை கொண்டு தாளித்து கொள்ளவும்.
பிறகு காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கினால் சுவையான கூட்டு தயார்.