ஆரஞ்சில் கேக், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை சாப்பிட்டு இருப்போம். வெறும் ஆரஞ்சு சாறை வைத்து சுவையான புலாவ் சமைக்கலாம். வாங்க ருசியான ஆரஞ்சு புலாவ் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-
பாசுமதி அரிசி -2 கப்
ஆரஞ்சு சாறு -2 கப்
பட்டை -1 துண்டு
லவங்கம் -2
நெய் -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -4
பட்டாணி -சிறிதளவு
முந்திரிப்பருப்பு -2 ஸ்பூன்
செய்முறை:-
2 கப் பாசுமதி எடுத்து கொண்டு நன்றாக அலசி அதனுடன் ஆரஞ்சு சாறு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் பட்டை, லவங்கம், வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்த அரிசி, தேவையான உப்பு ஆகியவை சேர்த்து ஒரு விசில் வரும் வரை காத்து இருக்கவும். ஒரு கடாயில் நெய், முந்திரிப்பருப்பு போன்ற பொருள்களை கொண்டு தாளித்து புலாவில் சேர்த்து கிளறினால் சுவையான ஆரஞ்சு புலாவ் தயார்.