மழை காலம் போய் வெயில் காலம் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் உடல் குளிர்ச்சிக்காக இந்த சாலட்டை சாப்பிட்டால் வெயிலுக்கு இதமாக இருக்கும். சரி வாங்க பப்பாளி சாலட் எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-
பப்பாளி பழம் -1
சீரகத்தூள் -1 ஸ்பூன்
மிளகுதூள் -1/2 ஸ்பூன்
பிளாக் உப்பு -1/4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:-
முதலில் பப்பாளி பழத்தில் உள்ள விதையை நீக்கி, தோள்களை சீவி சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு சீரகத்தூள், மிளகுதூள், பிளாக் உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும். பத்தே நிமிடத்தில் பப்பாளி சாலட் தயார். இதனை எந்த நேரத்திலும் சாப்பிடலாம்..