தாய்க்காக பாத்ரூமில் திருமணம்: வைரலாகும் மணமக்கள்

by Isaivaani, Feb 2, 2018, 12:21 PM IST

அமெரிக்காவில் தாய்க்காக நீதிமன்ற பாத்ரூமில் திருமணம் செய்துகொண்ட தம்பதியரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொள்ள மான்மவுத் மாகாணத்தைச் சேர்ந்த ப்ரைன் மற்றும் மரியா ஆகிய மணமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். திருமணம் நேரம் நெருங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னாள் மணமகன் ப்ரைனின் தாயார் பெண்கள் பாத்ரூமில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருவதாகத் தகவல் வந்தது.

செய்திகேட்டதும் மணமக்களும் குடும்பத்தாரும் பாத்ரூமுக்குச் சென்று ப்ரைனின் தாயாருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்துக்கொண்டிருந்தனர். அப்போது ப்ரைன்- மரியா திருமண நேரம் நெருங்கியதால் அவர்களைத் தேடி நீதிமன்ற அதிகாரிகள் பாத்ரூமுக்கே வந்தனர். அங்கேயே மணமக்களும், குடும்பத்தாரும் இருந்ததால் அதிகாரிகள் பாத்ரூமிலேயே ப்ரைன்- மரியா ஜோடிக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இந்த பாத்ரூம் திருமணப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You'r reading தாய்க்காக பாத்ரூமில் திருமணம்: வைரலாகும் மணமக்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை