சுகாதாரத்துறை அமைச்சர் செய்யும் வேலையா இது.. ச்சீசீ.. முகம் சுழிக்கும் மக்கள்

Feb 15, 2018, 13:59 PM IST

ஜெய்ப்பூர்: காரை விட்டு இறங்கிய ராஜஸ்தானின் சுகாதாரத்துறை அமைச்சர் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த காட்சி முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவருகின்றது. அங்கு, சுகாதாரத்துறை அமைச்சராக காளிச்சரண் சரப் உள்ளார். இவர், செய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீர் கழிக்க அவசரம் ஏற்பட்டிருக்கும் போலும், உடனடியாக காரை நிறுத்திய அமைச்சர், கிடுகிடுவென சாலையோரத்திற்கு சென்று சிறுநீர் கழித்தார்.

சாலையோரத்தில் பட்டப்பகலில் சிறுநீர் கழிப்பதை யாரோ ஒருவர் செல்போனில் படம் படித்துள்ளார். இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூரில் ஏற்கனவே சாலையோரத்தில் சிறுநீர் கழித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செய்ப்பூர் நகரம் பராமிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரே இதுப்போன்ற செயலில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் காளிச்சரணிடம் கேட்டபோது, இதை ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள். இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. இதற்கு என்னால் பதிவு சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த செயலால், பாஜகவுக்கு எதிர்ப்பலைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

You'r reading சுகாதாரத்துறை அமைச்சர் செய்யும் வேலையா இது.. ச்சீசீ.. முகம் சுழிக்கும் மக்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை