இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டால் வரும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்ப்போம்..

இரும்புச் சத்து உடல் நலத்துக்குத் தேவையான ஓர் ஊட்டச்சத்து. மிகவும் அவசியமான இந்தச் சத்தை இயற்கையாகவே நாம் பெற முடியும். தேவை ஏற்பட்டாலே ஒழிய மாத்திரைகள் சாப்பிடலாம். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில், ஹீம் (Heme), நான்-ஹீம் (Non-Heme) என இரண்டு வகை உள்ளன. காய்கறிகள்மூலம் நாம் பெறுவது ஹீம்.

இறைச்சிகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுவது நான்-ஹீம். பேரீச்சம்பழம், எள், அத்திப்பழம், மீன், முட்டை, கோழி, கீரை வகைகள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், மாம்பழம், அன்னாசி, பப்பாளி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

உணவு வகைகள் மூலமாக எடுத்துக்கொள்ளும் இரும்புச்சத்தைப் பொறுத்தவரையில் மீன், முட்டை, கோழி போன்ற இறைச்சி வகைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இரும்புச்சத்து, காய்கறிகளை விடவும் எளிதில் உறிஞ்சிக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ காபியில் இருக்கும் கஃபைன் சத்து, இரும்புச் சத்தை உடல் எடுத்துக்கொள்வதைக் குறைக்கும் என்பதால் இரும்புச் சத்துள்ள உணவு உட்கொண்டபிறகு, காபி, டீ அருந்துவதைத் தவிர்க்கவேண்டும்.

* இரும்புச் சத்துக்காக மாத்திரைகள் சாப்பிடுவதன்மூலம் கறை படிந்த பற்கள் உருவாகக்கூடும். ஆகவே, கூடுதலாக பழச்சாறுகள், தண்ணீர் என திரவ உணவுகளை உட்கொள்வது, தூங்கும் முன் பல் விளக்குவது போன்றவற்றால் பற்களில் கறை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

* சத்து மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதவை: பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், காபி, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.

* சத்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள், மற்ற நேரங்களைக் காட்டிலும், காலை நேரத்தில் உணவுக்கு முன்னர் அவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. இது இரும்புச்சத்தை உடல் எளிதில் கிரகித்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
உண்மையில், சத்து மாத்திரைகள் ஆரோக்கியமானவையே. அதில் பக்கவிளைவுகள் இருக்கும் என்றாலும், எவ்வித உடல்நலக் குறைபாடுகளையும் அது ஏற்படுத்தாது. அப்படியே பக்கவிளைவு ஏற்பட்டாலும் அவற்றை சரிசெய்வது எளிது.

உதாரணமாக, இரவில் இரும்புச்சத்து மருந்து சாப்பிட்டதும், பல் விளக்கிவிட்டு தூங்கினால் கறைபடிதல் பிரச்சனையைத் தவிர்க்கலாம். அதேபோல இரும்புச் சத்து மாத்திரைகளைச் சாப்பிடும்போது, முதல் இரு வாரங்களுக்கு செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் ஏற்படலாம்.

பழகப்பழக, உடலானது இரும்புச் சத்துகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்பட்டுவிடும். அதன்பிறகு பிரச்னைகள் தொடராது. பொதுவாக அனைத்துவிதமான உடல் செயல்பாட்டுக்கும் இரும்புச் சத்து தேவை. இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகும்.

உணவுமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதைப்போல, சத்து மாத்திரைகள் மூலம் மாற்றம் ஏற்படுத்துவதும், நல்லதுதான். மாத்திரைகள் பற்றிய பயத்தை விட்டொழிப்பதன்மூலம் ரத்தச்சோகை பிரச்னையை மிகவும்எளிதாகத் தவிர்க்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!