கோழி முட்டையிடுவது போல, இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் வினோதமாக முட்டையிடும் தகவல் அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள கோவா என்ற பகுதியை சேர்ந்த சிறுவன் அக்மல் (14). கடந்த 2016ம் ஆண்டில் முதல்முறையாக சிறுவனின் உடலில் இருந்து முட்டை வெளியில் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், இதுபோன்ற நிகழ்வு நடக்க சாத்தியமில்லை என்று அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், சிறுவன் அதன் பிறகும் கோழி முட்டையிடுவது போல் முட்டையிட்டுள்ளான். இது அனைவரிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்மலின் தந்தை கூறுகையில், “அக்மல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வருகிறான். இதுவரை அவன் 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை கோழி முட்டை போன்றே உள்ளது. அதை உடைத்து பார்த்தபோது உள்ளே மஞ்சல் நிறத்தில் இருந்தன. இதனால் பயந்துபோய், அக்மலை அழைத்துக் கொண்டு பல முறை மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால், சிறுவன் முட்டையிடுவது குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிகிச்சை அளிக்க திணறினர். இதனால், எங்களுக்கு இதுவரை பலனில்லை ” என்றார்.
அனால் இதுபோன்ற நிகழ்வு நடக்க சாத்தியமே இல்லை என சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.