உலகின் சக்திவாய்ந்த ராணுவ படை பட்டியலில் இந்தியாவிற்கு 4வது இடம்

Mar 6, 2018, 09:16 AM IST

உலகின் சக்கிவாய்ந்த ராணுவப் படைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

குளோபல் பையர் பவர் லிஸ்ட் 2017 என்ற பெயரில் சமீபத்தில் ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதில், உலகின் சக்சிவாய்ந்த ராணுவ படை கொண்ட நாடுகள் எவை என்பது குறித்து ஆராயப்பட்டது. இதற்காக, ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 அம்சங்கள் கொண்டு சில அடிப்படை கணக்குகளுடன் 133 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், உலகின் சக்கிவாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், அமெரிக்கா முதல் இடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது. இதைதொடர்ந்து, ஐந்தாவது இடத்தில் பிரான்சும், அடுத்தடுத்து ஜப்பான், துருக்கி, ஜெர்மனி, எகிப்த் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவின அண்டைய நாடான பாகிஸ்தான் 13வது இடத்தில் உள்ளது. வடகொரியா முதல் 10 இடத்தில் கூட இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலகின் சக்திவாய்ந்த ராணுவ படை பட்டியலில் இந்தியாவிற்கு 4வது இடம் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை