வட்டி விகிதத்தைக் குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..எந்த கடனுக்கெல்லாம் குறைத்திருக்கிறார்கள்...!

by Loganathan, Sep 8, 2020, 17:09 PM IST

வட்டி விகிதத்தைக் குறைத்த IOB

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வட்டி விகிதம் ஆனது அடிப்படை புள்ளிகளிலிருந்து 10 புள்ளிகளைக் குறைப்பதாக அவ்வங்கியின் தலைமை தெரிவித்துள்ளது.வங்கியில் பெற்றுள்ள கடன்கள் மீதான வட்டியானது 10 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது MCLR ( Margin cost of Funds based Lending rate ) எனப்படும் முறையில் கடன்கள் இணைக்கப்பட்டு இருந்தால் அந்த கடன்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

AGTAJ ( Agri term loan against jewellery ) எனப்படும் விவசாய தங்க நகைக் கடனை
RLLR ( Repo Linked Lending Rate ) இவற்றுடன் இணைத்து வட்டி விகிதம் 60 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும். இந்த அறிவிப்பு வரும் 10.09.2020 அன்று முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது ஐஓபி வங்கி கடந்த ஜூலை மாதம் RLLR மதிப்பானது 7.25% இருந்து 6.84% சதவீதம் குறைக்கப்பட்டது .இது மேலும் குறைந்துள்ளது கடனாளிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை