பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி - யாருக்கெல்லாம் பயன்படும்..?

Prime Ministers National Security Fund

by Loganathan, Sep 10, 2020, 18:25 PM IST

தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளைப் பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்காகவும் தேசியப் பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. ராணுவ படையினர் (துணை ராணுவப் படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. ஒரு செயற்குழுவால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியின் தலைவராகப் பிரதமரும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். நிதியமைச்சர் இந்த நிதியின் காசாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலர் செயற்குழுவின் செயலராகவும் செயல்படுகிறார்கள். இந்த நிதியின் கணக்குகள் இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ளன. தேசியப் பாதுகாப்பு நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது. இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை. இந்த நிதி தொகுப்புக்காக இணையம் வழியாக அனுப்பப்படும் நன்கொடையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மேலே உள்ள மூன்று இணையதளங்கள் வாயிலாகவும் நன்கொடையைச் செலுத்தலாம். நன்கொடை பெறுவதற்கான வங்கிக் கணக்கு எண் 11084239799, புதுதில்லி பார்லிமெண்ட் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிதிக்கான நிரந்தர கணக்கு எண் AAAGN0009F.

தேசியப் பாதுகாப்பு நிதியின் கீழ் உள்ள திட்டங்கள்

ராணுவப்படைகள், துணை ராணுவப்படைகளில் பணியாற்றி இறந்த வீரர்களின் மனைவியர் மற்றும் குடும்பத்தினர், தொழில்நுட்ப மற்றும் முதுநிலை கல்வி கற்பதற்காகக் கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நலத்துறை, ராணுவப் படைகளுக்கான திட்டத்தைச் செயல்படுத்துகிறது. துணை ராணுவப்படைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைப் பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இத்திட்டத்தைக் கவனித்துக் கொள்கின்றன.தேசியப் பாதுகாப்பு நிதியின் /செயல்படும் “பிரமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்” கூறுகள்

இந்த திட்டம் ராணுவப்படையிருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் பொருந்தும். மாதாந்திர கல்வி உதவித்தொகைஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் (அதிகாரி நிலைக்குக் கீழானவர்களுக்கு மட்டும்)அவர்தம் விதவை மனைவியர் பணியில் இருக்கும் போது இறந்த வீரர்களின் மனைவியர் துணைநிலை ராணுவத்தினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விதவை மனைவியர், குடும்பத்தினர், ஆகியோருக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.தொழில்நுட்ப கல்விக்கும் (மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சிஏ. மற்றும் ஏ.ஐ.சி.டி.ஈ./யூ.ஜி.சி. ஒப்புதல் பெற்ற பிற தொழில்நுட்ப கல்வி) கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மற்றும் பணியில் இருந்தபோது இறந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவியருக்குக் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும்போது, தகுதி நிலை (ரேங்க்) கட்டுப்பாடு இல்லை. இந்த திட்டம் அனைத்து துணை ராணுவப் படையினரின் குடும்பத்தினருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ படையினரின் குடும்பத்தினருக்கு இத்திட்டத்தின் கீழ், நான்காயிரம் புதிய கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன.

உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் படையினரின் குடும்பத்தினருக்கு 910 புதிய கல்வித் தொகையும், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் படையினரின் குடும்பத்தினருக்கு 90 புதிய கல்வித்தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. துவக்கத்தில் கல்வி உதவித்தொகை சிறுவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,250 ஆகவும், சிறுமிகளுக்கு ரூ.1,500 ஆகவும் இருந்தது. இந்தத் தொகை தற்போது, சிறுவருக்கு ரூ,2,000 ஆகவும், சிறுமியருக்கு ரூ.2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.சியாச்சின் ராணுவ முகாமுக்குப் பிரதமர் சென்றிருந்த போது அங்குள்ள மருத்துவமனையில், வீரர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சிடி ஸ்கேன் இயந்திரமும், அவர்களின் பொழுதுபோக்கிற்காக இரண்டு பெரிய ஹோம் தியேட்டர்களும், ரூ.6.28 கோடி செலவில் நிறுவப்படும் என்று அறிவித்தார். தேசியப் பாதுகாப்பு நிதியிலிருந்து ஹோம் திரையரங்கங்களுக்கான தொகை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் தனது நிதியிலிருந்து சிடி ஸ்கேன் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

ஐ.என்.எஸ் விராட் கப்பலுக்குப் பிரதமர் வருகை தந்த போது, அந்த விமானம் தாங்கிக் கப்பலில் மருத்துவ மற்றும் உடல்நலன் சார்ந்த வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தேசியப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.35.15 லட்சம் இதற்காக அளிக்கப்பட்டது.புனா, கிர்க்கீயில் உள்ள குயின்மேரி தொழில்நுட்பப் பயிலகம், மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான மறுவாழ்வு பணியில் ஈடுபட்டுள்ள மொஹாலியில் உள்ள பாராப்லேஜிக் மறுவாழ்வு மையம் ஆகியவைகளின் மேம்பாட்டுக்காகப் பிரதமர் தேசியப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.7.53 கோடியை வழங்கியுள்ளார்.இம்பாலில் குகி இன் காம்ப்ளக்ஸில் சமுதாயக் கூடம் மற்றும் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றை அமைக்க, தேசியப் பாதுகாப்பு நிதியிலிருந்து, ரூ.1.44 கோடியைப் பிரதமர் அளித்துள்ளார்.

டெஹன், செங்கே, லிகாபலி மற்றும் மிசாமரி ஆகிய இரண்டு பிரிவுகளில், சரக்குகளை (சமையல் உபகரணங்கள், உறைவிட வசதி உட்பட) கொண்டு செல்லும் வசதிகள், அருணாச்சலப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் தகவல் தொடர்பு (பாதுகாப்பான செயற்கைக் கோள் தொடர்பு அமைப்பை வாங்குவது) வசதிகளை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்ற போது அறிவித்தார்.தேசியப் பாதுகாப்புப் படைக்கான மத்திய நல நிதியை அதிகரிப்பதற்காகவும், நலப்பணிகளை மேற்கொள்ளவும், செலவினத்தைச் சமாளிக்கவும், ரூ.20 கோடியைத் தேசியப் பாதுகாப்பு நிதியிலிருந்து அளிக்கப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.எஸ்.பி.ஜி. குடும்பநல நிதியத்திற்கு, படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினர் நலனுக்கான பணிகளை மேற்கொள்ள, வருடாந்திர நிதியாக ரூ.15 லட்சம், தேசியப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

You'r reading பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி - யாருக்கெல்லாம் பயன்படும்..? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை