உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகம் உயிரிழப்பு

Mar 20, 2018, 18:06 PM IST

உலகின கடைசி வெள்ளை ஆண் காணடாமிருகம் கென்யாவில் உயிரிழந்துவிட்டதாக கென்யா நாட்டின் தனியார் அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கென்யாவில், 45 வயதான சூடான் என்ற வெள்ளை ஆண் காண்டமிருகம் ஒன்று ஓஎல் பிஜிடா என்ற வனவிலங்குகளுக்கான தனியார் அமைப்பின் கீழ் வளர்க்கப்பட்டு வந்தது. உலகிலேயே, சுடான் தான் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் என்ற பெயரை பெற்றது.

இந்நிலையில், சுடானுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலைக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், எப்போதும் சேர்வாக காணப்பட்டுள்ளது. அதன் முதிர்வு காரணமாக தசை மற்றும் எலும்புகள் பாதிக்கப்பட்டன.

இதனால், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுடானால் எழுந்து நிற்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதற்காக, பல்வேறு சிகிச்சைகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. இருப்பினும், சுடான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலை ஓஎல் பிஜிடா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழந்தது விலங்குகள் பிரியர்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகம் உயிரிழப்பு Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை