பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு!

by Loganathan, Sep 28, 2020, 21:10 PM IST

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.பொறியியல் ரேங்க் பட்டியலில் சுஷ்மிதா என்ற மாணவி முதலிடமும், நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் 2வது இடமும், காவ்யா என்ற மாணவி 3வது இடமும் பிடித்துள்ளனர்.பொறியியல் படிப்புக்கான இணையவழி விண்ணப்பங்கள் 15-07-2020 ல் இருந்து வரவேற்கப்பட்டன. இணைய வழி விண்ணப்பித்தலுக்கான கடைசி நாளாக 16-08-2020 அறிவிக்கப்பட்டது.

இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் தங்களின் சான்றிதழ்களை இணையத்தில் அப்லோடு செய்ய 31-07-2020லிருந்து 24-08-2020 வரை கெடு விதிக்கப்பட்டது.இவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ரேண்டம் நம்பர் தயாரிக்கும் பணி 26-09-2020 வரை நடந்தது. இந்நிலையில் இந்த மாணவர்களுக்கான ரேங்க் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பித்த அனைவரும் தங்களின் ரேங்க் பட்டியலை
www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Special article News

அதிகம் படித்தவை