வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்...!

Special camp to add name to voter list:

by Balaji, Oct 21, 2020, 09:52 AM IST

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களைச் சேர்க்கத் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தங்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்துக் கொள்ளலாம்.

சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி விபரம் :

நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020 மற்றும் டிசம்பர் மாதம்
5.12.2020 ,6.12.2020 ,12.12.2020 ,13.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தங்களைப் பற்றிய விவரங்களுடன் இந்த முகாமில் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்துக் கொள்ளலாம்.

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை