தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் சீமான். பெயருக்கேற்றபடி செல்வச் சீமான் இவர்
2006 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் இவர். ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜை அன்று சென்னை அல்லது கம்பம் நகரில் உள்ள தனது ஒரு வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தி பூஜையில் கலந்து கொள்ளும் மக்களுக்கு தானம், தர்மம் செய்வதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.
தற்போது கொரானா ஊரடங்கு காலம் என்பதால் சென்னையில் உள்ள வீட்டை தவிர்த்துவிட்டு கம்பம் நகரில் உள்ள தனது வீட்டில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் கலந்து கொண்ட மக்களுக்கு அவர் நிதி உதவி அளித்தார். சீமானின் காலில் விழுந்து வணங்கினார் சீமானை விட வயதில் பெரியவர்கள் பலரும் அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றவர்களைப் போல வயதானவர்களுக்கும் அவர்களது தலையில் கைவைத்து சீமான் ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு கொரானா தொற்று காலம் என்பதால் பொருளாதார சிக்கலில் தவிக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற நிதி அளித் திருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கம்பம் நகரைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சீமான் வழங்கிய நிதியினை பெற்றுச் சென்றனர்.