வேண்டுதல் பலித்தது : வேலையும் கிடைத்தது வாக்கு கொடுத்ததால் வாழ்வை முடித்த வாலிபர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஏழுவிளை என்ற கிராமத்தை சேர்ந்தவ செல்லச்சாமி என்பவரது மகன் நவீன். 32 வயதே ஆனபொறியியல் பட்டதாரியான இவர் பல ஆண்டுகளாக வேலை தேடி வந்தார் . வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த நவீன் எனக்கு வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்கிறேன் என கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.

கடவுள் அவருக்கு கருணை காட்டினார். சில நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நவீனுக்கு உதவி மேலாளர் வேலை கிடைத்தது. ஆனால் அவர் வேளையில் சேர்ந்த சில நாளில் ஊருக்கு திரும்பி வந்தார். கடவுளின் கருணையால் தான் இந்த வேலை கிடைத்தது. எனவே, கடவுளிடம் செய்து கொடுத்த வாக்கை மீறக்கூடாது என்பதால், தனது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக நேற்று நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி என்ற இடத்தில் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன் நவீன் எழுதிய கடிதம் ஒன்றை அவரது சட்டை பையலிருந்து போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் தன் பெற்றோருக்கு என்று எழுதி இது பற்றிய விபரத்தை குறிப்பிட்டிருந்தார்.

“வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்வதாக ஆண்டவனிடம் நேர்ந்து ( வேண்டி) இருந்தேன். இறைவனும் என் மீது கருணை காட்டி வேலை கொடுத்து விட்டான். இறைவனுக்கு வாக்கு கொடுத்தபடி நான் கடவுளிடமே ஐக்கியமாகிறேன்” என அந்த கடிதத்தில் நவீன் எழுதி இருந்தார்.
..இப்படியும் சில ஜென்மங்கள்..

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>