மின்சார தடை ஏற்பட்டால் ரூ. 2000 பெறலாம்!

by Loganathan, Nov 4, 2020, 19:52 PM IST

நமது அத்தியாவசிய தேவைகளில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுவதால், நமது வாழ்க்கை முறை மின்சாரம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். மாநில அரசுகள் வெகுஜன மக்களுக்கும், அலுவலக பயன்பாட்டுக்கும் பல்வேறு சலுகைகளோடு மின்சார இணைப்பை ஏற்படுத்தி தருகிறது. மின்சார வாரியம் மின் அளவீட்டை குறித்து விட்டு சென்ற 15 நாட்களுக்குள் நாம் பணம் செலுத்தி ஆகவேண்டும். பணம் செலுத்த தவறினால், மின்சார வாரியம் பயனாளர்களுக்கு கணக்கீட்டு அளவோடு அபராதம் சேர்த்து மொத்த தொகையையும் கட்ட வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். ஆனால் மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு அதனை சம்பந்தப்பட்ட மின் வாரிய பணியாளர்கள் சரிசெய்ய தவறினால் அதற்கான அபராதமாக மின் வாரியம் பயனாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2000 அளிக்க வேண்டும்.

மின்சார வாரியத்தின் மின்பகிர்மான ஒழுங்கீட்டு விதி 21 ன் படி நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பழுது ஏற்படும் போது அது சம்பந்தமாக மின் வாரிய அலுவலகத்தில் உள்ள புகார் ஏட்டில், மொபைல் எண் உடன் பதிவு செய்ய வேண்டும். இந்த புகார் பதிவு செய்யப்பட்ட பின் நமது வீடு மாநகரப் பகுதிக்குள் இருந்தால் 1 மணி நேரத்திலும், நகராட்சி பகுதி எனில் 3 மணி நேரத்திலும் மற்றும் கிராமப்புற பகுதியெனில் 6 மணி நேரத்திற்குள்ளும் பழுதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் தாமதிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.50 வீதம், அதிகபட்சம் ரூ.2000 வரை பயனாளருக்கு, மின்சார வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த அபராதத் தொகை பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்பட மாட்டாது. மாற்றாக பயனாளரின் மின் இணைப்பு எண்ணில் வரவு வைக்கப்படும். பின்னர் மின் கட்டணம் தொகையில் இந்த தொகை கழிக்கப்படும். இந்த அபராதத் தொகை பணி செய்ய தவறிய பணியாளரின் சமப்ளத்தில் பிடித்தம் செய்யப்படும். எனவே இனி மின்சார பிரச்சினை என்றால் பதிவு செய்து ரூ. 2000 பெற்றிடுங்கள்.

You'r reading மின்சார தடை ஏற்பட்டால் ரூ. 2000 பெறலாம்! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை