இந்தியாவில் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் 25 வருடங்களுக்கு
முன்பு தொலை தொடர்பு புரட்சி ஏற்பட்டது. இணையதளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் பரவலாக அது மக்களிடையே சென்றடையவில்லை. ஆனால் கடந்த 2016–ம் ஆண்டுக்கு பிறகு இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது. 2016–ம் ஆண்டு 34 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருந்தனர். அது இப்போது 76 கோடியாக உயர்ந்துவிட்டது.
ஒவ்வொரு மாதமும் 86 லட்சம் பேர் இணையதள இணைப்பு பெற்று வருகிறார்கள். இதில் 2.3 கோடி பேர் கம்பி வழியாக இணைப்பு பெற்றுள்ளனர். 72.6 கோடி பேர் செல்போன் மூலம் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். மேற்கண்ட தகவல்களை தொலைபேசி
ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.