“யாரும் IPL பாக்காதீங்க” காவிரி பிரச்சனையை சர்வதேச அளவில் கவனம் ஈர்க்க ஜேம்ஸ் வசந்தன் யோசனை

சினிமாவில் இசையமைப்பாளராக, சின்னத்திரையில் பிரபல இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராக, "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக, என பன்முகத் தன்மையுடன் எப்போதும் பிசியாக இருப்பவர் ஜேம்ஸ் வசந்தன்.

இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘அரசியல், சமூக நீதி, மதம்' சார்ந்த பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட கருத்துக்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டவர்.

தற்போது "காவிரி மேலாண்மை வாரியம்" தொடர்பான அரசியல் கட்சிகள், பொதுமக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதின் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க புதுமையான யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது "சென்னையில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை, ரசிகர்கள் யாரும் நேரில் சென்று பார்க்காமல் இருந்தால், மைதானம் காலியாக இருக்கும், இதன் மூலம் தமிழக மக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும், மிகப்பெரிய அளவில் சர்வதேச அளவிற்கு தெரியப்படுத்தலாம், அனைவரது கவனத்தையும் ஈர்க்கலாம்" என்பதாக யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

அவரது விரிவான யோசனையை கீழே பார்க்கலாம்;- காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். April 10-ம் தேதி CSK-வின் முதல் match. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் - ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி.. உத்வேகம்!

இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன். இது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை!

இது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை! உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை! போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட!

அந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்கிற இந்தத் தியாகம், 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள். இதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, CSK-க்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம்.

Pls Share!

இவ்வாறு அவர் யோசனை தெரிவித்துள்ளார். மதுவைப் போல் கிரிக்கெட் இரத்தத்தில் ஊறிவிட்டதென்றும், டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டதால் அது நடைமுறை சாத்தியமில்லை என்றும், பல எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும், தமிழகமே பார்த்து வாய் பிளந்த, "ஜல்லிக்கட்டு" போராட்டத்திற்கு முந்தின நாள் வரை, அப்படி ஒரு போராட்டம் நடக்க வாய்ப்பே இல்லை என்று தானே எல்லோரும் நினைத்திருப்போம். இதனால் சகல ஜனங்களுக்கும் நாம் தெரிவிப்பது என்னவென்றால்,

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!