கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று கூறி திடீரென கழுதை பாலின் டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. இது நம் நாட்டில் அல்ல. அல்பேனியாவில் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியா நாட்டில் கழுதை பால் வாங்குவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், கழுதை பாலில் அதீத சத்து இருக்கிறது. கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்நாட்டு மக்கள் கழுதை பாலை அதிகம் பருகுகின்றனர்.
டிமாண்ட் அதிகம் உள்ளதால் கழுதை பாலின் விலையும் அதிகரித்துள்ளது. டிரானாவிற்கு தெற்கே பேப்பர் என்ற கிராமத்தில் உள்ள சிறிய பண்ணையை நடத்திவருகிறார் 37 வயதான எல்டன் கிகியா. அவரிடம் ஒரு டஜன் கதைகள் உள்ளன. அல்பேனியாவின் மலைப்பகுதி வழியாக அதிக சுமைகளைச் சுமப்பதற்கும் வண்டிகளை இழுப்பதற்கும் பயன்பட்டு வந்த கழுதைகள் அடிக்கடி துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. இப்போது கழுதை பாலுக்கு திடீர் கிராக்கி ஏற்பட கழுதைகளும் சித்திரவதையில் இருந்து தப்பியிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக தனது வேலையை விட்டுவிட்டார். ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை இந்திய மதிப்பில் 4000 ரூபாய். அந்நாட்டு மக்களின் ஒரு மாத சராசரி வருமானம் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய்.அவர்களைப் பொறுத்தவரை கழுதைப்பால் என்பது ஒரு எட்டாக் கனி. இருந்தாலும் கொரானாவை குணப்படுத்தும் என்ற அதீத நம்பிக்கை என்ன விலை கொடுத்தேனும் கழுதை பாலை வாங்க வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளி இருக்கிறது.