தென்காசி மாவட்டம் புளியரை வனத்துறை சோதனை சாவடியில் 20 டன் கடல் சிப்பிகள் சிக்கியது. இது தொடர்பாக லாரியில் வந்த இருவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கேரளவிற்கு பால், காய்கறி வகைகள், கட்டுமான பொருட்கள் லாரிகள் முலம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள் அங்கிருந்து வரும் போது கழிவு பொருட்களை முறைகேடாக ஏற்றி வந்து தமிழக எல்லையில் கொட்டி வந்தனர்.
இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் சோதனை சாவடிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று கேரள மாநிலம் ஆழப்புழாவிலிருந்து 20 டன் கடற்சிப்பிகள் லாரி மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் புளியரை வனத்துறை சோதனைச்சாவடியில் வாகன சோதனையை அப்புறப்படுத்தினர்.
அப்போது கேரள பதிவெண் கொண்ட லாரியை மடக்கி சோதனையிட்டதில் அதில் 20 டன் கடல் சிப்பிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லாரி ஓட்டுனர் அஜித் , அவருடன் வந்த வினில் என்பவரிடமும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள கடற்சிப்பி சிக்கியது தொடர்ந்து சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.