கிரீஸ்: கிரீஸில் கார் ஒன்று இரவு நேர கேளிக்கை விடுதியாக மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் மக்களுக்கு மன ரீதியிலான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தற்போது விடுதிகள், தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிரீஸ் நாட்டின் தெசலோனிகி நகரை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது டாக்ஸியை இரவு நேர கேளிக்கை விடுதியாக வித்தியாசமான முயற்சியில் மாற்றியுள்ளார். இரவு நேரங்களில் தனது காரை எடுத்துச் செல்லும் அவர் , பயணிகளை சந்தோசம் படுத்தும் விதமாக டாக்ஸிைய பல்வேறு விதமாக வடிவமைத்துள்ளார். காருக்குள் கலர் கலரான லைட், சூப்பர் மியூசிக் பொருத்தப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்ஸி உரிமையாளர் கூறுகையில், தெசலோனிகி நகரில் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனசோர்வை போக்கி அவர்களை உற்சாகப்படும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தார். இதில் பயணம் செய்யும் பயணிகள் இசையை ரசிப்பதுடன், மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவிக்கின்றனர். தற்போது இந்த கார் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காரில் பயணிகளுக்கு பயணிகளுக்கு ஒரு இரவு நேர பார்ட்டி சென்று வந்த அனுபவம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.