கூல் சம்மர் கொண்டாட்டமா..? நோட் பண்ணிக்கோங்க..!

கோடை விடுமுறை தொடங்கியாச்சு. விடுமுறை 'ப்ளான்' எல்லாம் ஏற்கெனவே தயார் செய்திருப்பிங்க. கூடவே ஒரு முக்கியமான விடுமுறை திட்டத்தையும் கண்டிப்பா சேர்த்துக்கணும்.

விடுமுறை ஸ்பாட், ஹோட்டல், பஸ், கார் என ப்ளான் பண்ணும்போதே உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்தும் ப்ளான் செய்துக்கணும். இது விடுமுறைக் கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்கும் ப்ரெண்ட்ஸ்..!

சுற்றுலா செல்லும் இடங்களில் சந்தை, கடை எங்கிருக்கிறது எனத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள் என அவ்வப்போது ஆரோக்கிய வேட்டையில் ஈடுபடலாம். இது உங்களை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

நாம் தங்கும் ஹோட்டல் அறையில் மினி ஃபிரிட்ஜ் இருந்தால் கூடுதல் ப்ளஸ். இல்லைன்னா கையோடு ஒரு சின்ன ‘கெட்டில்’ வச்சுக்கலாம். உள்ளூர் சந்தையில் வாங்கும் காய்கறிகள் வச்சு மினி சூப் செய்து மிட்நைட் பசியை ஈடுசெய்யலாம். இன்னும் நூடுல்ஸ், காய்கறி சாலட் என மினி ப்ரேக்ஃபாஸ்ட் கூட நம்ம கைவசமே செய்து ருசிக்கலாம்.

ஒரு ஊருக்குச் செல்லும்போது அந்த ஊரின் ஸ்பெஷல் ஐட்டங்களை ஸ்டார் ஹோட்டலில் தேடுவதைவிட லோக்கல் சந்துகளில் தேடலாம். உள்ளூர் கடைகளில் கூடுதல் சுவையும் ஆரோக்கியமும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

காலை உணவுக்காக அதிகமாகத் தேடி அலையாமல் ‘நம்ம கிச்சன்’ மூலமாகவே மினி சாலட் செய்து சாப்பிடுங்க. பசியும் அடங்கும், ஆரோக்கியமும் அதிகம். இந்த மாதிரியான சத்தான உணவுகள் அந்த நாளைக்கான எனர்ஜியை நமக்கு அதிகமாகவே தரும்.

ஸ்டார் ஹோட்டலோ, தள்ளுவண்டிக் கடையோ, அந்தப் பகுதிகளில் ஸ்பெஷலான உணவு, ஆரோக்கியமான உணவு என்னவெல்லாம் இருக்கு, கிடைக்கும் என கேட்டு தெரிஞ்சுக்கோங்க. கடைகளில் கொடுக்கும் மெனு கார்டிலும் ஆரோகியமானதை கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

விடுமுறைக் கொண்டாட்டம்தான். ஆனாலும் சந்தோஷமான பயணம் அமைய ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். சாப்பிடக்கூட ரூல்ஸ் வேண்டாம் என நினைக்காமல் அரோக்கியத்துக்காக சில பழக்கங்களை எப்பவும் ஃபாலோ பண்ணனும். அப்போதான் கிடைக்கும் ரியல் கொண்டாட்டம்!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds

READ MORE ABOUT :