கணினி பயிற்றுவிப்பாளர் தேர்வு, விசாரிக்க ஆணையம் அமைக்க பரிந்துரை!

by Loganathan, Feb 22, 2021, 21:16 PM IST

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான தேர்வு மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் இந்த ஆணையத்தால் வெளியிடப்படும். இந்த ஆணையத்தின் தலைவராக ஜெகநாதன் (இஆப) செயல்படுகிறார். இந்த ஆணையத்தின் மூலம் கடந்த 2018 ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வி துறையில் காலியாக இருந்த 814 கணினி பயிற்றுவிப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான தேர்வு 23-06-2019 மற்றும் 27-06-2019 அன்று விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இடங்களில் கணினி முறையில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இந்த விமர்சனங்கள் சட்டரீதியாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த வழக்கில் W.A.No. 330 & 398 of 2021 கடந்த 10-02-2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த பிரச்சினை விசாரிக்கவும், கணினி வழி தேர்வின் நம்பகத்தன்மையை ஆராயவும் இரு நபர் குழவை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் வரும் 01-03-2021 மாலை 5 மணிக்குள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு அட்டையுடன், தங்களின் குறைகளையும் மேலும் நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்கி அனுப்பிவைக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையத்திற்கு இந்த தகவல்களை அனுப்பியவர்கள் மீண்டும் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கான நகலை ஸ்கேன் செய்து trbtwomemberscommittee@gmail.com இதற்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி
Two Members Committee,
PGCI Exams,
4th Floor, Puratchi Thalaivar Dr. MGR Centenary Building,
DPI Campus, College Road, Nungambakkam,
Chennai- 06.

https://tamil.thesubeditor.com/media/2021/02/twoman.pdf

You'r reading கணினி பயிற்றுவிப்பாளர் தேர்வு, விசாரிக்க ஆணையம் அமைக்க பரிந்துரை! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை