நாம் கம்ப்யூட்டரில் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் வேலை செய்யும்போது, பல்வேறு இணையதளங்களை பார்ப்போம். அப்பொழுதெல்லாம் உள்ளே நுழைவதற்கு நம்முடைய மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் (பாஸ்வேர்டு) இணையதளங்கள் கேட்கும். தேவையான விவரங்களை உள்ளிடுவதோடு, பின்னர் பயன்படுத்த வசதியாக அவற்றை சேமித்தும் வைக்கலாம். அதே இணையதளத்தை நாம் மீண்டும் பார்க்கும்போது, விவரங்களை நாம் மீண்டும் பதிவிட தேவையில்லை. தானாகவே அந்த விவரங்கள் உள்ளிடப்படும். ஏற்கனவே பார்த்த இணையதளத்தில் நாம் மீண்டும் பாஸ்வேர்டு போட்டால் என்ன நடக்கும்? அதற்கு, சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை நாம் கூகுள் குரோமில் பார்க்கலாம். https://passwords.google.com/என்ற இணைப்பில் இணையதளங்களையும் அவற்றுக்கான பாஸ்வேர்டுகளும் சேமிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
குரோமில் சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை எப்படிப் பார்க்கலாம்?
குரோம் செயலியின் வலப்பக்க மேல் மூலையில் மூன்று புள்ளிகள் செங்குத்தாக (vertical) காணப்படும். அவற்றை அழுத்தவும். செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று அதில் பாஸ்வேர்டு (Passwords) என்பதை தெரிவு செய்யவும். சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை பார்க்கும்போது, தொடர்புடைய இணையதளத்தையும் பயனர் பெயரையும் பார்க்கலாம். அதில் கண் போன்ற அடையாளம் (icon) காணப்படும். அதை அழுத்தவும்.
கூகுள் குரோம் ஏன் என்னுடைய பாஸ்வேர்டுகளை மறந்துவிடுகிறது?
குரோம், இணையதளங்களுக்கான பாஸ்வேர்டுகளை நினைவில் வைப்பதோ, மறந்துபோவதோ இல்லை. பாஸ்வேர்டை சேமிக்கும் வசதி பயன்பாட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதா (disabled) என்பதை பயனரே உறுதி செய்ய வேண்டும்.
பாஸ்வேர்டுகளை மாற்றுவதால் ஹேக்கர்களை தடுக்க முடியுமா?
பாஸ்வேர்டுகளை மாற்றுவதால் தகவல்களை திருடும் ஹேக்கர்களை தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவே, அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லத. அது உங்கள் கணக்கின் பாதுகாப்புதன்மையை கூட்டும்.
கூகுள் பாஸ்வேர்டு மானேஜர் சேவைக்கு கட்டணம் உண்டா?
கூகுள் பாஸ்வேர்டு மானேஜர் (password manager) சேவை முற்றிலும் இலவசமானது. கூகுள் வெப் பிரௌசருக்குள் கிடைக்கும் இந்த வசதி, நீங்கள் இணையத்தில் பயன்படுத்தும் பயனர் பெயர், கடவுச்சொற்கள் (பாஸ்வேர்டு), பரிவர்த்தனை முறைகள், முகவரிகள் ஆகியவற்றை சேமித்து வைக்கும்.