உயிர் துறக்க சுவிட்சர்லாந்து செல்லும் விஞ்ஞானி (வீடியோ)

by Isaivaani, May 4, 2018, 17:45 PM IST
"2018 மே 10-ம் தேதி நான் மரிப்பேன்," என்று சொல்கிறார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் குட்ஆல்.
முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பு, 1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் நகரில் பிறந்தவர் டேவிட் குட்ஆல். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் கல்வி நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளை வகித்த இவர் தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி. 1979-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றபின்னர், உலக சுற்றுச்சூழல் குறித்து 500 ஆசிரியர்கள் எழுதிய 30 தொகுப்பு நூல்களை செப்பனிட்டுள்ளார்.
தனது 104வது பிறந்தநாளின்போது அவர், "நான் சந்தோஷமாக இல்லை. மரிக்க விரும்புகிறேன். இதில் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. நான் இறப்பதை யாராவது தடுத்தால்தான் வருத்தப்படுவேன்," என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவ உதவியோடு உயிரை துறக்கும் யுதான்ஸியாவுக்கு ஆஸ்திரேலியாவில், குறிப்பாக டேவிட் வசித்து வந்த மேற்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி இல்லை. அமெரிக்காவின் ஏழு மாகாணங்கள் மற்றும் ஜப்பான், பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற சிறிய நாடுகளில் மருத்துவ உதவியோடு உயிரை விடுவதற்கு அனுமதி இருக்கிறது.
டேவிட் குட்ஆல், உயிரை துறப்பதற்கான நாளாக மே 10 குறிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர் சுவிட்சர்லாந்தின் பாஸேலில் உள்ள லைஃப் சர்க்கிள் கிளினிக்கிற்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார். 
இதற்காக எக்ஸிட் இன்டர்நேஷனல் அமைப்பில் டேவிட் குட்ஆல் கடந்த இருபது ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த அமைப்பின் நிறுவனரான பிலிப் நிட்ஸ்கே, "டேவிட் சில நாட்கள் பிரான்ஸில் இருப்பார். அதன் பின்னர் மே 10-ம் தேதி, உயிர் துறப்பதற்காக சுவிட்சர்லாந்து புறப்படுவார்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading உயிர் துறக்க சுவிட்சர்லாந்து செல்லும் விஞ்ஞானி (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை