நேருக்கு நேர் வாங்கய்யா..!- மோடியை விடுவதாக இல்லை!

Advertisement

’மோடியும் எடியூரப்பாவும் என்னுடன் நேருக்கு நேர் விவாதப் போரில் பக்கேற்கத் தயாரா?’ என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சித்தராமையா.

கர்நாடக மாநில பொதுத் தேர்தல் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகளுக்கும் இடையிலான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக களத்தில் நேரடி போட்டியில் இருக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மத்தியில் பலதரப்பிலான தளங்களிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, `சித்தராமையாவின் அரசு செய்த சாதனைகளை எந்த காகிதத்தையும் பார்க்காமல் 15 நிமிடம் பேசுமாறு ராகுல் காந்திக்கு நான் சவால் விடுகிறேன்.

ஹிந்தி, ஆங்கிலம், அல்லது அவரது தாய் மொழியில் கூட இதை ராகுல் பேசலாம்’ என்று கேலி செய்யும் வகையில் பேசினார் மோடி. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா, `அன்பிற்குறிய மோடிஜி, எடியூரப்பாவின் அரசு செய்த சாதனைகள் குறித்து எந்த காகிதத்தைப் பார்த்து வேண்டுமானாலும் 15 நிமிடம் பேசுங்கள்’ என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக #siddaramaiahrocks என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய ட்ரெண்டிக் பட்டியலில் உள்ளது. ஆனால், தான் சொன்னதை மோடியும் எடியூரப்பாவும் சாதரணமாகக் கருதிவிடக் கூடாது என நினைத்த சித்தராமையா தற்போது எழுத்துப்பூர்வமாக தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து கர்நாடகா தேர்தல் களம் கடைசிக்கட்டத்திலும் அனல் பறக்கும் ஸ்டன்ட் ஒன்றை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
/body>