வண்டலூர் ஜூவில் உள்ள உயிரினங்களை காண புதிய நேரலை ஆப்

May 9, 2018, 09:07 AM IST

வண்டலூர் ஜூவில் உள்ள உயிரினங்களை காண புதிய ஆப் வசதியை அதன் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்குள்ள உயிரினங்களை காண தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களின் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாகும்.

வண்டலூரில் 602 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பூங்காவில், 175 இனங்களில் 2,379 எண்ணிக்கையிலான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 இங்கு 175 இனங்களில் 2,379 எண்ணிக்கையிலான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே வண்டலூர் பூங்காவில் உள்ள உயிரினங்களை காண ‘வண்டலூர் ஆப்’ என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதற்காக 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனுடன் ஆப் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பில், விலங்குகளின் அசைவுகளை நேரலையில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை ஒட்டி மே மாதம் முழுவதும் இந்தப் பூங்கா விடுமுறை இன்றி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதோ வண்டலூர் ஆப்பின் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.aazp

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading வண்டலூர் ஜூவில் உள்ள உயிரினங்களை காண புதிய நேரலை ஆப் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை