”விஜய் மல்லையாவை இனி நீதியிலிருந்து தப்பி ஓடியவன் என்று அழைப்போம்’ என லண்டன் நீதிமன்றம் கடிந்துகொண்டுள்ளது.
இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் முதல் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் இந்திய அரசு, அவரை நாடு கடத்த முயன்றுவருகிறது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை, தலைமை மாஜிஸ்திரேட்டு ஆண்ட்ரியூ ஹென்ஷா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதுநாள் வரையில் இந்திய சிபிஐ அதிகாரிகள் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தனர்.
சமீபத்தில் நடந்த விசாரணையில் இந்திய வங்கிகளிடம் விஜய் மல்லையா பெரும் தோல்வியைச் சந்தித்தார். இதனால் மல்லையாவுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் லண்டன் நீதிமன்றம் சர்வதேச அளவில் மல்லையாவுக்கு இருக்கும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், அடுத்தகட்ட விசாரணையில் நீதிபதி ஹென்ஷா, “இனி தப்பி ஓடிவந்த மல்லையவை ‘நீதியிலிருந்து தப்பியோடியா மல்லையா’ என அழைக்கலாமா?” என கோபத்துடன் கடிந்துகொண்டுள்ளார்.
ஆனால், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ’ஆதராங்கள் அற்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால்’ சுமத்தப்பட்ட வீண் பழிகள் என வாதாடி வருகிறார் மல்லையா.