மலைப்பாம்பை கழுத்தில்போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த வனத்துறை அதிகாரியை பாம்பு கழுத்தை இறுக்கி சாகடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று சூழ்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள் இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து 18 அடி நீளமும், 40 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பை பிடித்தனர். மலைப்பாம்பை பிடித்த அதிகாரி அதனை கழுத்தில் போட்டுக் கொண்டு கெத்தாக செல்பிக்கு போஸ் கொடுத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அதிகாரியின் கழுத்தை இறுக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அச்சத்தில் தெறித்து ஓடினர். இதன் பிறகு, கழுத்தில் இருந்த பாம்பை பிடித்த சக அதிகாரிகள் அதனை காட்டில் கொண்டு விட்டனர்.
மலைப்பாம்புடன் செல்பி எடுக்கபோய் அதிகாரி சிக்கிக்கொண்ட சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.