வெளிநாடு செல்லவேண்டும் என்றால் ஒருவருக்கு பாஸ்போர்ட் மிகவும் அவசியமானது.
ஒரு மாநிலத்தில் சில முக்கியமான நகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. எந்த ஒரு மாநிலத்திலும் எல்லா இடங்களிலும் பாஸ்போர்ட் பெற்றுவிட முடியாது. அந்த நடைமுறை சற்று மாரி, தங்கள் மாநிலத்தில் பாஸ்ப்போர்ட் அலுவலகம் இல்லையென்றால் அருகில் இருக்கும் வேறு மாநிலத்திற்கு சென்று விண்ணப்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
சில ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாஸ்போர்ட் பெரும் நிலையும் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில் 'பாஸ்போர்ட் சேவா' என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
'பாஸ்போர்ட் சேவா' மொபைலில் இருந்தால் இருக்கும் இடத்தில் இருந்தே பாஸ்ப்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அப்படி விண்ணப்பித்தால் நீங்கள் கொடுக்கும் முகவரியில் காவல் துறை சார்பில் சரிபார்த்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என சுஷ்மா குறிப்பிட்டார்.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் பாஸ்போர்ட் பெரும் நடைமுறை எளிமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.