பெண்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் உணவு வழங்கக்கூடாது: இந்தோனேசியா

Sep 6, 2018, 15:02 PM IST

இந்தோனேசியாவில் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் வழங்கக்கூடாது என்ற புதிய உத்தரவு இந்தோனேசியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள அச்சே என்ற மாகாணத்தில் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, உறவினர் அல்லாத ஆண்&பெண் ஒன்றாக அமரக்கூடாது, திருமணமாகாத பெண்கள் ஆண்களுடன் சுற்றக்கூடாது போன்ற பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிர்யூன் என்ற மாவட்டத்தில், இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று புதிய உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாகாண அரசு அறிவித்துள்ளது.

You'r reading பெண்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் உணவு வழங்கக்கூடாது: இந்தோனேசியா Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை