பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பரேலி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில் பலமாக நின்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில், நடிகர் விஜயுடன் தமிழன் என்ற படத்தில் ஜோடிபோட்டார். அதன்பிறகு, இந்தி படங்கள் தமிழில் ரீமேக் ஆன ரா ஒன் மற்றும் கிருஷ் &3 களில் நடித்திருந்தார்.
திரைத்துறைக்கு வருவதற்கு முன், கடந்த 2000ம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி, தமிழல் தவிர ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், குவான்டிக்கோ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதராகவும் தொண்டாற்றி வருகிறார்.
பிரியங்கா சோப்ராவின் சேவையை பாராட்டி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டது.
அதில், நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு கவுரவ டாக்டர் பட்டம வழங்கி சிறப்பிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உத்தரப் பிரதேச மாநில நிதி அமைச்சர் ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.