அர்ச்சனை கடவுள் பெயரிலா அல்லது நமது பெயரிலா?

பிறந்த நாள் திருமண நாள் என அனைத்து சுபதினங்களுக்கும் நாம் செல்லக்கூடிய ஒரே இடம் கோவில் மட்டும்தான்

by Vijayarevathy N, Sep 18, 2018, 21:39 PM IST

பிறந்த நாள், திருமண நாள் என அனைத்து சுபதினங்களுக்கும் நாம் செல்லக்கூடிய ஒரே  இடம் கோவில் மட்டும்தான். கோவிலுக்கு சென்று கடவுளின் அருளைப் பெறுவதே பெரும் மகிழ்ச்சி.

சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பார்ப்போம் அதே சமயம் கடவுளின் பெயரிலும் அர்ச்சனை செய்வோம்.

இவ்வாறு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது நல்லதா? இல்லை இறைவன் பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா? என்பது குறித்து பல சந்தேகம் எழும். அதனை தெளிவுப்படுத்த தொடர்ந்து கீழே படியுங்கள்.

கோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நன்மையா?
அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் நோக்கம்.

கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம். அவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்க வேண்டுமென்றால் நம் பெயரில் செய்யலாம்.

ஆனால் கடவுளுக்கு நம் கோரிக்கை தெரியாதா என்ன? எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்.

You'r reading அர்ச்சனை கடவுள் பெயரிலா அல்லது நமது பெயரிலா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை