காதல் நோயின் அறிகுறிகள் இதுதானா?

Love symptoms

Oct 20, 2018, 17:23 PM IST

காதல் எனும் நோய் வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்குகிறது. அவற்றின் பிடியிலிருந்து தப்பிவிட அதற்குமுன் நோயின் அறிகுறிகள் தெரிதல் மிக அவசியம்.

காதல் காற்று உரசிவிட்டாலே முகத்தில் ஒரு பளபளப்பு, உடம்பில் ஒரு மினுமினுப்பு ஏற்படும். முதலில் நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதற்கு சில அறிகுறிகள் உங்களுக்கு தென்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காதலில் விழுந்தவர்களுக்கு என்னவெல்லாம் ஏற்படும் என்று பட்டியலிட்டுள்ளனர்.

காதலில் விழுந்தவர்கள் சம்பந்தமே இல்லாமல் உளறி கொட்டுவார்களாம். தட்டு நிறைய உணவை போட்டு வைத்தாலும் பசி எடுக்காதாம். கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் கனவுகள்தான் வருமாம் ஆனால் தூக்கம் வராதாம் இந்த அறிகுறிகள் இருந்தாலே உங்களுக்கு காதல் வந்திருச்சி என்று உணர்ந்து கொள்ளலாமாம்.

காதலிப்பவர்களின் உதட்டில் ஒட்டவைத்த புன்னகை நிரந்தரமாக குடியேறுமாம். பெரியவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ளத் தோன்றுமாம். நல்லவன் என்ற இமேஜ் ஏற்படுமாம்.

காதல் உணர்வு வந்தாலே உடலில் ரசாயன மாற்றம் ஏற்படுமாம் உடல் மெருகேறுவதோடு பளபளப்பாக மாறுமாம். சின்ன சின்ன முட்டாள்தனமான செய்கைகள் செய்யத் தோன்றுமாம். காதல் நினைவுகள் வட்டமிட வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாதாம்.

நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் குறைந்து கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவழிப்பார்களாம். உடை உடுத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்களாம்.

நள்ளிரவில் தூக்கத்தை விட இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்களாம். நகம் கடிப்பது போன்ற புதிய பழக்க வழக்கங்கள் ஏற்படுமாம்.

காதலிப்பவர்கள் அதிகநேரம் தனிமையில் செலவழிப்பார்களாம். தனிமையை அதிகம் விரும்புபவரை பார்க்க நேர்ந்தால் இதயம் அதிகப்படியாக துடிக்குமாம்.

நண்பர்கள் யாராவது காதலித்தால், அவர்களைப் பற்றியும், அவர்கள் காதலை சொன்ன விதத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்களாம்.

You'r reading காதல் நோயின் அறிகுறிகள் இதுதானா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை