சத்தீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து பாஜக அரசு விடுவித்துவிட்டதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டியிருக்கிறது. அங்கு நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நகர்ப்புற மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் பாதுகாக்கிறது என சாடியிருந்தார்.
இன்று அம்மாநிலத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரசாரத்தின் போது, சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக 4-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும்.
இம்மாநிலத்தில் ரமன்சிங் தலைமையிலான அரசு மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து பெரும்பகுதியை விடுவித்திருக்கிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.