இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட் யா மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து ஆபாசமாக விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து ராகுலும், பாண்ட்யாவும் கிரிக்கெட் வாரியத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்த இருவரும் இந்தியாவுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர்.
இருவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுத் தலைவர் விநோத்ராய்க்கும், உறுப்பினர் டயானா எடுல்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் தலையிட்டு பி.எஸ்.நரசிம்மா என்பவரை நீதிமன்ற ஆலோசகராக நியமித்தது.
இந்தப் பிரச்னையில் வீரர்கள் இருவர் மீதான சஸ்பென்ட் உத்தரவை தற்காலிகமாக ரத்து செய்ய நரசிம்மர் பரிந்துரை செய்தார். இதையேற்று இருவர் மீதான சஸ்பென்ட் உத் தரவு உடனடியாக ரத்து செய்யப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா ஒரு நாள் போட்டி அணியில் வளர்ந்து வரும் வீரர். இதனால் தற்போது நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.