இது தான்டா தேசபக்தி... இந்தியர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட தோனி

தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்பட்டு விடக்கூடாது என்ற பதற்றத்திலும் ரொம்ப கூ...லாக தோனி செய்த செயல் இந்தியர்களின் மனதை வெகுவாக கவர்ந்து ஏக பாராட்டுகளை பெற்றுள்ளார்.

நியூசிலாந்தின் ஹாமில்டனில் 3-வது டி20 போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. நியூசிலாந்து அணி பேட்டிங்கில் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மிஸ்டர் கூல் தோனி அமைதியாக கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மைதானத்தில் திடீர் பரபரப்பு. இந்திய ரசிகர் ஒருவர் கையில் தேசியக் கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி வந்தார்.

தோனியை நெருங்கிய அந்த ரசிகர் தடாலென அவரது காலில் விழுந்தார். அப்போது தேசியக்கொடி மண்ணில் படுவது போல் சரிவதைக் கண்ட தோனி லாபகமாக கொடியை தன் கையில் எடுத்துக் கொண்டு கூலாக நடந்து சென்றார். அந்த ரசிகரும் தோனியின் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

தேசியக் கொடி மண்ணில் விழுந்து அதற்கு அவமானம் நேர்ந்துவிடக் கூடாது என்ற தோனியின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News