ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் சாதனை!

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Jan 23, 2018, 23:04 PM IST

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

19 வயதிற்குட்பட்டோருக்கான உலக்கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகப்பட்சமாக ஜாசன் சங்கா 58 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் 20 ரன்களை தொடவில்லை. குறிப்பாக அந்த 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை.

பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதற்குப் பிறகு லியம் பேங்ஸ் [3], கேப்டன் ஹாரி ப்ரூக் [0], வில் ஜாக்ஸ் [1] என அடுத்தடுத்து வெளியேறினார்.

ஆனால், அதிரடியாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் டாம் பேண்டன் 58 ரன்கள் குவித்து அவுட்டானார். இவர்கள் நால்வரையும் லாய்ட் போப் வெளியேற்றினார்.

இவரையடுத்து, ஃபினலி ட்ரெனௌத் [5], டாம் ஸ்ரிவன் [0], லூக் ஹோல்மன் [2], எதன் பாம்பர் [2] என சொற்ப ரன்களில் வெளியேற ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்தாளரான லாய்டு போப் அபாரமாக பந்துவீசி 9.4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்ததன் மூலம் வெற்றி ஆஸ்திரேலியா வசமாக்கினார்.

You'r reading ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் சாதனை! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை