2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஆண்டு பங்கேற்க உள்ளது. இதனால், ரசிகர்கள் பெருத்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்தது.
ஏலத்தில் வீரர்களை வாங்க ஒரு அணி ரூ.80 கோடி வரை செலவு செய்யலாம். ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களின் விலை ரூ.80 கோடியில் இருந்து கழிக்கப்படும். ஒரு அணியில் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு அணி 25 வீரர்களை வைத்து கொள்ளலாம்
விலைபோகாத வீரர்கள்:
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் ஏலம் கேட்கவில்லை. இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவையும், குஷல் பெரேராவையும் யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
அதேபோல் ஹசிம் அம்லா, மார்ட்டின் கப்தில், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், இயான் மார்கன், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ், நாதன் லயன், மோய்ஸஸ் ஹென்றிக்கேஸ், நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், லூக் ரோஞ்சி, டாம் லாதன், இஷ் சௌதி, தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் யாரும் ஏலத்துக்கு எடுக்கவில்லை.
இந்திய வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் ஓஜா, இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், உன்முக்த் சந்த், ஈஸ்வர் பாண்டே, ரிஷி தவான் உள்ளிட்டோரும் ஏலத்தில் போகவில்லை.