ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடிக்கு எதிராக பார்வையாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக கட்சி தலைவர்கள் தன்னை 'நாட்டின் காவலாளி'(Chowkidar) என அழைத்துக் கொண்டனர் . இதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குறை கூறி வந்தன . இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் அசத்தலான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் முழக்கங்களை எழுப்பினர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் கிரிக்கெட் தொடர்பான கோஷங்களை எழுப்பாமல், "சௌகிதார் சோர் ஹை" என்று கூச்சலிட்டனர்.
தொடர்ந்து கூச்சலிட்ட வீரர்கள் வரிசையாக நின்ற படி "சௌகிதார் சோர் ஹை" என்ற மனித சங்கிலி அமைப்பை உருவாக்கினர் . "சௌகிதார் சோர் ஹை" என்ற முழக்கம் அரசியல் மேடைகளைத் தாண்டி ஐபிஎல் போட்டிகள் வரை எதிரொலித்திருப்பது பாரதிய ஜனதா கட்சியினரை கவலையடைய வைத்துள்ளது.
"சௌகிதார் சோர் ஹை" என்ற மனிதச் சங்கிலி அமைப்பில் வெளியான இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.