ஐபிஎல் பைனல் கோப்பை யாருக்கு? 3 முறை தொடர் தோல்வி..! மும்பையை பழி தீர்க்குமா தோனி படை!AZ

இந்தாண்டின் ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவை என்பதால் 4-வது முறையாக பட்டம் வெல்லப் போவது யார் என்ற போட்டா போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறின.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதனால் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஒரு வழியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது போல் சம அளவில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.சென்னை அணி 10-வது முறையாக ஐபிஎல் போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்து சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 5 -வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது .


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. அத்துடன் முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக 3 முறை தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்த தோல்விகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை அணியை பழி தீர்த்து சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் தட்டிச் செல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் தோனியின் ரசிகர்கள் உள்ளனர் .

More Sports News
dhoni-rishab-pant-comparison-is-a-worst-thing-says-yuvaraj-singh
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
south-africa-won-the-3rd-t20-match-against-india
பெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்!
kohli-beat-rohit-sharma-in-t20-top-scorer
டி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்!
vineshphogat-selected-to-play-in-olympics
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!
ashes-test-cricket-ended-in-tie
ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also
அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
fifa-u17-female-worldcup-held-next-year-in-india
இந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்!
david-warner-poor-play-in-ashes-test
இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா?
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
samantha-wrapped-shoot-for-96-movie-official-telugu-remake
திரிஷாவாக மாறிய சமந்தா.... விஜய்சேதுபதியாக மாறிய சர்வானந்த்..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
sye-raa-narasimha-reddy-collection-hindi-version
சிரஞ்சீவி பட வசூல் 8 கோடியுடன் முடிவுக்கு வந்தது
Tag Clouds