கத்தார் ஓப்பன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார் மரியா ஷரபோவா.
ரஷ்யாவின் மரியா ஷரபோவா டென்னிஸ் உலகில் முன்னணி விளையாட்டு வீராங்கணையாகத் திகழ்ந்தவர். கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையின் போது அவரது விளையாட்டு வாழ்க்கையில் முதல் சோதனை ஏற்பட்டது.
ஊக்கமருந்து சோதனையில் சர்ச்சையில் சிக்கி 15 மாதங்கள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தடை பெற்றார் ஷரபோவா. அதன் பின்னர் இரண்டு போட்டிகளில் சாதாரணமாக விளையாடி தோல்வியையேத் தழுவினார்.
இதன் பின்னர் நேற்று நடந்த கத்தார் ஓப்பன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஷரபோவா பங்கேற்றார்.
இப்போட்டியில் ரோமானியாவைச் சேர்ந்த மோனிகாவை ஷரபோவா எதிர்கொண்டார். ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரும் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 41-வது இடத்தில் இருப்பவருமான ஷரபோவா, 92-வது இடத்தில் இருக்கும் மோனிகா உடன் போட்டியிட்டார். வெகு சில நிமிடங்களே நீடித்த இப்போட்டியில் ஷரபோவா மோனிகாவிடம் 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் படுதோல்வி அடைந்தார்.