உலகின் நட்சத்திரக் கிரிக்கெட் வீராங்கணையான செரினா வில்லியம்ஸின் கணவர் தற்போது சர்வதேச வைரல் நாயகனாகி வருகிறார்.
2017-ம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கணை செரினா வில்லியம்ஸுக்கும் அமெரிக்க தொழில் அதிபர் அலெக்ஸிஸ் ஒஹானியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா என்ற ஐந்து மாத பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மீண்டும் டென்னிஸ் மட்டையுடன் களம் வந்தார் செரினா.
திருமணத்துக்குப் பின்னரும் செரினா விளையாடுவாரா? தாயான பின்னரும் ஒரு பெண்ணால் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற முடியுமா? என்ற பல கேள்விகளுக்கும் செரினா முற்றுப்புள்ளி வைத்து களத்தில் கலக்கத் தொடங்கினார். இந்நிலையில் திருமணமான பெண்ணுக்கு குடும்பத்தில் சுதந்திரம் தருவது முக்கியமல்ல. சம உரிமை தருவதுதான் அவசியம் என்பதை செரினாவின் கணவர் அலெக்ஸிஸ் ஒஹானியான் நிரூபித்துள்ளார்.
சமீபத்தில் செரினா உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடும் போது, பார்வையாளர்கள் வரிசையில் அம்ர்ந்திருந்த அவரது கணவர் அலெக்ஸிஸ் குழந்தை ஒலிம்பியா உடன் அமர்ந்ந்து செரினாவை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இந்தப் புகைப்படமே தற்போது வைரலாகி உள்ளது. குழந்தைக்குப் பால் கொடுப்பதில் இருந்து செரினாவை உற்சாகப்படுத்துவது வரையில் என வேலைக்குச் செல்லும் பல தாய்மார்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் அலெக்ஸிஸ்.