உலகக்கோப்பையை வெல்ல கோலியின் ஆக்ரோ‌ஷமும், தோனியின் அமைதியும் தேவை - கபில்தேவ்

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் கேப்டன் கோலியின் ஆக்ரோ‌ஷமும் தோனியின் அமைதியும் அவசியம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

Mar 3, 2018, 10:43 AM IST

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் கேப்டன் கோலியின் ஆக்ரோ‌ஷமும் தோனியின் அமைதியும் அவசியம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள கபில்தேவ், “டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், சேவாக், லட்சுமணன் ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி திணறும் என எதிர்பார்த்த நிலையில், இளம் வீரர்களால் எழுச்சி பெற்று சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரையில் அணியில் அனைவரும் ஆக்ரோ‌ஷமாக இருந்தாலும் சிக்கல், அமைதியாக இருந்தாலும் சிக்கல் தான். இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் கேப்டன் கோலியின் ஆக்ரோ‌ஷமும் தோனியின் அமைதியும் அவசியம். எனவே கோலி, தோனியை போல ஆக்ரோ‌ஷமும், அமைதியும் சம அளவில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பயனளிக்கும்.

ஜடேஜா, அஸ்வின் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இது சற்று வருத்தமான செய்தியாக இருந்தாலும், ரிஸ்ட் ஸ்பின்னர்களான சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தங்கள் பணியை மேலும் மேம்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுகிறார்கள்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெருக்கடி இல்லாமல் விளையாட வேண்டும். மற்ற ஆல்ரவுண்டர்களோடு ஒப்பிடும் போது, ஹர்திக் பாண்டியா மீது அதிக அழுத்தம் வைக்கப்படுவதாக கருதுகிறேன். பாண்டியா பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினாலே பந்து வீச்சு தானாகவே வந்து விடும்.

அழுத்தமின்றி, நெருக்கடியின்றி கவனம் சிதறாமல் விளையாடினால் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என கபில்தேவ் கூறினார்.

You'r reading உலகக்கோப்பையை வெல்ல கோலியின் ஆக்ரோ‌ஷமும், தோனியின் அமைதியும் தேவை - கபில்தேவ் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை